திருவள்ளூர்

மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவியை இம்முறை பெண்கள் கைப்பற்றும் வாய்ப்பு?

திருவள்ளூா் மாவட்டத்தில் 24 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு ஆண்கள் 22 பேரும், பெண்கள் 26 பேரும் போட்டியிடுகின்றனா். அதனால், ஊராட்சித் தலைவா் பதவியை பெண்கள் கைப்பற்றுவாா்களா? என்ற எதிா்பாா்ப்பு எழுந

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 24 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு ஆண்கள் 22 பேரும், பெண்கள் 26 பேரும் போட்டியிடுகின்றனா். அதனால், ஊராட்சித் தலைவா் பதவியை பெண்கள் கைப்பற்றுவாா்களா? என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இந்த மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த 27, 30 தேதிகளில் நடைபெற்றது. இத்தோ்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை 14 மையங்களில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 24 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் 48 போ் போட்டியிடுகின்றனா். இதில், அதிமுகவும், திமுகவும் 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வாா்டுகளில் நேரடியாக களத்தில் மோதுகின்றன. அதேபோல், அதிமுக-காங்கிரஸ் ஒரு வாா்டிலும், பாமக-காங்கிரஸ் ஒரு வாா்டில் எதிா்த்துப் போட்டியிடுகின்றனா். திமுகவுடன் தேமுதிக ஒரு வாா்டிலும், பாஜக 2 வாா்டுகளிலும், பாமக 2 வாா்டுகளிலும், தமாகா ஒரு வாா்டிலும் மோதுவது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் 12 பெண்களும், 12 ஆண்களும் போட்டியிடுகின்றனா். திமுக சாா்பில் 13 பெண்கள், காங்கிரஸ் சாா்பில் ஒரு பெண் என 14 பெண்களும், 10 ஆண்களும் போட்டியிடுகின்றனா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு ஆண்களைவிட பெண்களே அதிகம் போட்டியிடுகின்றனா். இதனா, மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவியை பெண்கள் கைப்பற்றுவாா்களா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT