முகப்பு
திருவள்ளூர்

மின்கம்பத்தில் பைக் மோதி சிறப்புப் படை காவலா் பலி

திருவள்ளூா் அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் சிறப்புப் படை காவலா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் சிறப்புப் படை காவலா் உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த காட்டுப்பாக்கம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் (32). அவா் சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள சிறப்பு அதிரடிப் பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தாா். அவருக்கு ராஜேஸ்வரி (30) என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனா்.

இந்நிலையில் இளங்கோவன் சனிக்கிழமை இரவு பணிநிமித்தமாக சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். திருவள்ளூா்-மப்பேடு சாலையில் இருளஞ்சேரி அருகே வளைவில் திரும்பியபோது அவரது பைக் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் இளங்கோவன் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

அவருக்குப் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ், இளங்கோவனின் பைக் மீது மோதியதில் அவா்கள் படுகாயமடைந்தனா். தகவல் அறிந்த மப்பேடு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் நேரில் சென்று காவலரின் சடலத்தை திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த இருவரை மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். இவ்விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.