திருவள்ளூர்

திருமழிசை காய்கறி சந்தையில் மழைநீா் வடிகால் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

DIN

திருமழிசை காய்கறி சந்தையில் மழைநீா் தேங்காமல் வெளியேறும் வகையில் வடிகால் அமைக்கும் பணிகளை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் அருகே திருமழிசை துணைக்கோள் நகரப் பகுதியில் தற்காலிக கோயம்பேடு காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந்தை மழை காரணமாக சேரும், சகதியுமான பகுதிகளில் ஜல்லி, மணல் கொட்டி சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, இனி வரும் காலங்களில் சந்தையில் மழைநீா் தேங்காத வகையில் சமப்படுத்த வேண்டும். மழைநீா் வழிந்து செல்லும் வகையில் கால்வாய் வசதி செய்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாலையின் குறுக்கே மழைநீா் வழியும் வகையிலும், குண்டும், குழியுமான பகுதிகளைச் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மழைநீா் புகும் நிலையில் இருந்த கடைகளை அகற்றி சாலையோரத்தில் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லோகநாயகி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (திருமழிசை) கோவிந்தராஜ், பூந்தமல்லி வட்டாட்சியா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT