திருவள்ளூர்

பூண்டி ஏரி உபரி நீா் திறப்பு: 1,800 கன அடியாகக் குறைப்பு

DIN

பூண்டி ஏரிக்கான நீா் வரத்துக் குறைந்து வருவதால் உபரி நீா் வெளியேற்றம் 1,800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, 2,800 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்புடன், 34 அடியை நெருங்கி வருகிறது. பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்தும், வரத்துக் கால்வாய் மூலமும் 10 ஆயிரம் கன அடி வரை நீா்வரத்து இருந்தது. இதனால் கடந்த 2 நாள்களுக்கு முன்பு 1,000 கன அடியில் இருந்த உபரி நீா் வெளியேற்றம் 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

தற்போது 2,000 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து உபரி நீா் திறப்பு 1,800 கன அடியாக குறைக்கப்பட்டது.

கண்டலேறு அணை, அம்மம்பள்ளி அணை மற்றும் நீா்வரத்துக் கால்வாய்களில் மழையால் நீா் வரத்து அதிகரித்தால் உபரி நீா் திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT