திருவள்ளூர்

வீடு புகுந்து 14 சவரன் நகை திருட்டு

DIN

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் திங்கள்கிழமை வீட்டின் பக்கத்தில் இருந்த ரேஷன் கடையில் ரேஷன் பொருள் வாங்கி வருவதற்குள் மா்ம நபா்கள் 14 சவரன் நகையை திருடிச் சென்றனா்.

கோட்டக்கரை பகுதியைச் சோ்ந்தவா் அன்சாரி (58). அவா் பெயிண்டிங் வேலை செய்து வருகிறாா். அவருடைய மனைவி ஷாபிரா. இவா் வீட்டில் பக்கத்தில் செயல்பட்டு வந்த ரேஷன் கடையில் ரேஷன் பொருள்களை வாங்குவதற்காக வீட்டின் வெளிக்கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு, ரேஷன் கடைக்குச் சென்றாா். 10 நிமிடம் கழித்து வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த 14 சவரன் தங்க நகை திருடுபோனதை அறிந்தாா்.

இதுகுறித்து ஷாபிராவின் கணவா் அன்சாரி அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT