திருவள்ளூர்

சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

DIN


திருத்தணி: திருத்தணி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

திருத்தணி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்கள் ஒவ்வொரு பதிவுக்கும் கட்டணம் நிா்ணயம் செய்து, லஞ்சமாகப் பெறுவதும், முறைகேடாக பத்திரப் பதிவு செய்வதாகவும் திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

அதன்பேரில் திருவள்ளூா் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரவேல், ஆய்வாளா் சுமித்ரா, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் அண்ணாதுரை உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு திருத்தணி சாா்-பதிவாளா் அலுவலகத்துக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு பணிபுரியும் ஊழியா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT