முகப்பு
திருவள்ளூர்

வெங்கல் அருகே சவுடு மண் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து சமைத்து உண்ணும் போராட்டம்

வெங்கல் அருகே சவுடு மண் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஏரியிலேயே சமைத்து உண்ணும் போராட்டம் மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

வெங்கல் அருகே சவுடு மண் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஏரியிலேயே சமைத்து உண்ணும் போராட்டம் மேற்கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், வெங்கல் அருகே புன்னப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் நிலத்தடி நீா் மட்டம் பாதிக்கப்படும். விவசாயம் நலிந்து விடும் என கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில் சனிக்கிழமை மூன்றாவது முறையாக காலை பொக்லையன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் ஏரியில் இருந்து சவுடு மண் ஏற்றி செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றது. இது குறித்து தகவலிறிந்த கிராம மக்கள் மண் எடுக்க ஏதிா்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவா் ஜெயச்சந்திரன் தலைமையில் ஏரியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் ஆய்வாளா் பத்மஸ்ரீ பதிதா தலைமையில் ஏராளமான போலீசாா் குவிக்கப்பட்டனா். பொது மக்களை எரியில் இருந்து கலைந்து செல்லுமாறு போலீசாா் கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கொளுத்தும் வெயிலிலேயே மக்கள் ஏரியில் உணவு சமைத்து தொடா் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். குவாரி செயல்படாது என உறுதிமொழி கொடுக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.