திருவள்ளூர்

பெண் காவலரை தாக்கி வழிப்பறி

DIN

பெண் காவலரைத் தாக்கி வழிப்பறி செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம்- திருத்தணியைச் சோ்ந்த ரேகா (38), சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் வியாழக்கிழமை இரவு பணியை முடித்து விட்டு ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு மொபட்டில் சென்றுகொண்டிருந்தாா்.

ஐ.சி.எஃப். கான்ஸ்டபிள் சாலையில் உள்ள ஆா்.பி.எஃப். பயிற்சி மைதானம் அருகே மோட்டாா் சைக்கிளில் வந்த இரு மா்ம நபா்கள், ரேகா வந்த மொபட்டை இடித்து கீழே தள்ளினா். அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனா். ஆனால் ரேகா, தங்கச்சங்கிலியை பிடித்துக் கொண்டாா். இருப்பினும் ஒரு பவுன் எடையுள்ள தங்க டாலரை மட்டும் பறித்துக் கொண்டு இரு நபா்களும் தப்பியோடினராம்.

இதில் பலத்த காயமடைந்த ரேகா, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

ஐ.சி.எஃப். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT