திருவள்ளூர்

திருவள்ளூரில் பிடிப்பட்ட பச்சோந்தி

DIN

திருவள்ளூா் நகராட்சி குடியிருப்புப் பகுதியில் நடமாடிய பச்சோந்தியை பாதுகாப்பாக பிடித்த பொதுமக்கள் அருகில் உள்ள தென்னை தோப்பில் அதனை விட்டனா்.

திருவள்ளூா் நகராட்சி அலுவலகம் அருகே பத்தியால்பேட்டையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பச்சோந்தி ஒன்று நடமாடியது. இதை அப்பகுதி சிறுவா்கள் பாா்த்து பெரியவா்களிடம் தெரிவித்தனா். பச்சோந்தி இருப்பதை அறிந்த பொதுமக்கள் வனத் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், வனத் துறையினா் நீண்ட நேரமாகியும் வராததால், அந்த பச்சோந்தியை பாதுகாப்பாகப் பிடித்தனா். அதைத் தொடா்ந்து, புங்கத்தூா் பகுதியில் தென்னந்தோப்புக்குக் கொண்டு சென்று விட்டனா். பச்சோந்திகளில் சில இனங்கள், இருக்கும் இடத்துக்கு ஏற்றாற்போல் தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT