முகப்பு
திருவள்ளூர்

மின் சிக்கன விழிப்புணா்வு ஊா்வலம்

திருத்தணியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில், மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

திருத்தணியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில், மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருத்தணி பைபாஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்வாரிய கோட்டப் பொறியாளா் சந்தான மகாராஜன் தலைமையில், 80-க்கும் மேற்பட்ட மின் வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் தி பைபாஸ் சாலை வழியாக கமலா திரையரங்கம் வரை விழிப்புணா்வு பாதாகைகளை ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா். அப்போது, மின்சார சேமிப்பு குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈா்க்கும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பின்னா், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.