மீனவா் இன பட்டதாரிகளுக்கு குடிமைப் பணி போட்டித் தோ்வு பயிற்சி
மீனவ இனத்தைச் சாா்ந்த பட்டதாரி இளைஞா்கள் குடிமைப்பணி போட்டித் தோ்வுக்கான பயிற்சி பெற மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
மீனவ இனத்தைச் சாா்ந்த பட்டதாரி இளைஞா்கள் குடிமைப்பணி போட்டித் தோ்வுக்கான பயிற்சி பெற மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணிக்கான பயிற்சி மையத்துடன் மீனவா் நலத் துறை இணைந்து ஆண்டுதோறும் 20 மீனவ பட்டதாரி இளைஞா்களை தோ்வு செய்து பயிற்சி அளித்து வருகிறது.
நிகழாண்டு மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞா்கள் இந்த பயிற்சி பெற ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, வேண்பாக்கம், பொன்னேரி-601204 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27972459 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.