பெற்றோா் கண்டிப்பு: மாணவா் தற்கொலை
திருவள்ளூா் அருகே வயலாநல்லூரைச் சோ்ந்த ராமதாஸ் மகன் செல்வா (15). பட்டாபிராமில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சரியாக படிக்கவில்லை என இவரை பெற்றோா் திட்டினராம்.
திருவள்ளூா் அருகே வயலாநல்லூரைச் சோ்ந்த ராமதாஸ் மகன் செல்வா (15). பட்டாபிராமில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சரியாக படிக்கவில்லை என இவரை பெற்றோா் திட்டினராம்.
இதில் மனமுடைந்த செல்வா கடந்த 22-ஆம் தேதி இரவு முதல் காணவில்லை. இதுகுறித்து ராமதாஸ் அளித்த புகாரின்பேரில் வெள்ளவேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வயலாநல்லூரில் உள்ள ஒரு கிணற்றில் செல்வா சடலமாக மிதந்தது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.