உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு ஓட்டம்
75-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலகம் இணைந்து நடத்திய உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு
75-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலகம் இணைந்து நடத்திய உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு ஓட்டத்தை ஆட்சியா் அமா் குஷ்வாஹா ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன், துணை காவல் கண்காணிப்பாளா் சாந்தலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆழி வாசன், வட்டாட்சியா் சிவப்பிரகாசம், நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த விழிப்புணா்வு ஓட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தூய நெஞ்சக் கல்லூரி வழியாக பாச்சல் ஆயுதப்படை மைதானம் சென்றடைந்து. இதில் 150 விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.