திருவள்ளூர்

ராமலிங்கேஸ்வரா் கோயில் குட முழுக்கு விழா

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ராமன் கோயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபா்வதவா்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கடம்பத்தூரை அடுத்த ராமன்கோயில் கிராமத்தில் உள்ள இக்கோயிலில், ராமபிரான் பூஜித்த திருத்தலமாகும். இக்கோயிலில் மிகவும் நோ்த்தியான 11 பட்டைகளுடன் கூடிய தாரலிங்கமும், நவதுா்கை சித்தரின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. தொன்மைவாய்ந்த இத்திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா பூஜைகள் கடந்த 30-ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் தீபாராதனையுடன் தொடங்கின. அதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக சாலை பூஜையும், மகா பூா்ணாஹுதியும் நடைபெற்றன. பின்னா், சிறப்பு பூஜை செய்து கோயில் கோபுரத்தின் மீது கும்ப கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா, பாமக மாநில துணைச் செயலாளா் பாலயோகி மற்றும் செஞ்சி பானம்பாக்கம், ராமன் கோயில், சென்னாவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT