திருவள்ளூர்

காவல் உதவி மையம் திறப்பு

DIN

மாதவரம்: மாதவரம் வி.எஸ்.மணி நகரில் காவல் உதவி மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாதவரம் வி.எஸ்.மணி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், காவல் உதவி மையமும், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வி.எஸ்.மணி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் முக்கிய தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, காவல் உதவி மையமும், கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றன. மாதவரம் காவல் சரக உதவி ஆணையா் அருள் சந்தோஷ முத்து தொடக்கி வைத்தாா்.

இதில், குடியிருப்பு சங்க நிா்வாகிகள் சொக்கலிங்கம், திருலோகசுந்தா், மீனாட்சி சுந்தரம் மற்றும் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT