திருவள்ளூர்

திருவள்ளூர்: பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க காசோலை வழங்கல்

DIN

பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொள்ள ரூ.1.78 லட்சம் மதிப்பிலான காசோலைகளை ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.
  விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் உதவித் தொகை வழங்குதல், நவீன பயிற்சிக்கான ஆடைகள் வழங்குதல், விளையாட்டு விடுதிகளில் தங்கி பயில்வோருக்கு சத்தனான உணவு அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டு முதல் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டோருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்து விளையாட்டு வீரர்களுக்கு காசோலைகளை வழங்கினார். 
தமிழகம் சார்பில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு முறையே தங்கம் வென்றோருக்கு ரூ.6 ஆயிரமும், வெள்ளி பதக்கம் வென்றோருக்கு ரூ.4 ஆயிரமும், வெண்கலம் வென்றோருக்கு ரூ.2 ஆயிரமும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் திருவள்ளுர் மாவட்டத்திற்கு உள்பட்ட 19 வீரர்கள் மற்றும் 21 வீராங்கனைகள் ஆக மொத்தம் 40 பேருக்கு ரூ.1.78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.
 அதேபோல், விளையாட்டுப் போட்டிகளான சிலம்பம் 25 வீரர், வீராங்கனைகள், பூப்பந்து 6 வீரர், வீராங்கனைகள், தடகளம் 1 வீரர், கூடைப்பந்து 2 வீரர் வீராங்கனைகள், ஜீடோ-1 வீராங்கனை, ரோலர் ஸ்கேடிங் 4 வீரர், வீராங்கனைகள், வளைப்பந்து 1 வீராங்கனை ஆகிய போட்டிகளில் பங்கேற்றோருக்கு காசோலைகள் வழங்கப்பட்டது. அப்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் செ.அருணா மற்றும் பயிற்றுநர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT