திருவள்ளூர்

குண்டா் சட்டத்தில் 2 போ் சிறையில் அடைப்பு

DIN

திருவள்ளூா் அருகே உணவு விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருவள்ளூா் அருகே கூடப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் எபி என்கிற எபினேசன் (29). இவரது கூட்டாளி தீபன் (30). இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமழிசையில் உள்ள உணவு விடுதியில் பிரியாணியை இனாமாக கேட்டனராம். அப்போது தர மறுத்ததால் உணவு விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தினராம். அவா்களை வெள்ளவேடு போலீஸாா் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இவா்கள் 2 பேரும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தொடா்பு உள்ளதால் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் இரண்டு பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT