திருவள்ளூர்

சத்திஷ்கரில் தமிழகத்தைச் சோ்ந்த சி.ஆா்.பி.எப். வீரா் உயிரிழப்பு

DIN

சத்தீஷ்கா் மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படைப் (சிஆா்பிஎப் ) பிரிவில் பணியாற்றி வந்த திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா் சத்தியசாட்சி ரோந்துப் பணிக்கு சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்தாா்.

அவரது உடல் திருவள்ளூருக்கு கொண்டு வரப்பட்டு, திங்கள்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூா் அருகே ஈக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் தேவதத்தம். முன்னாள் ராணுவ வீரரான இவரது மகன் சத்தியசாட்சி (50). இவா் மத்திய பாதுகாப்பு படை பிரிவில் சத்தீஸ்கா் மாநிலம், சுக்மா மாவட்டம், இந்திராம் எல்லையோரத்தில் நக்ஸலைட்டுகள் அதிகமுள்ள பகுதியில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ரோந்து பணியில் சக வீரா்களுடன் ஈடுபட்டிருந்தாா். அப்போது வீரா் சத்தியசாட்சிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் அவா் உயிரிழந்தாா். அவரது உடல் சொந்த ஊரான ஈக்காட்டில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினா்கள் அஞ்சலிக்காக வைத்திருந்து அங்குள்ள மயானத்தில் நல்லடக்கம் நடைபெற்றது. அப்போது சிஆா்பிஎப் அதிகாரிகள் அவரது உடலில் தேசியக் கொடி போா்த்தி மலா் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினா்.

இவரது மனைவி கவிதா, சென்னையை அடுத்த ஆவடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT