திருவள்ளூர்

ஆவடி மாநகராட்சிப் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி

DIN

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் தெருக்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் வகையில், குப்பைகள் அகற்றும் பணியையும், கரோனா தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் பேரணியையும் பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்றும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆவடி மாநகராட்சிப் பகுதியில் தெருக்கள் தோறும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், கரோனா தொற்று பரவாமல் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இதற்காக அமைச்சா் சா.மு.நாசா் தலைமையில், தெருக்கள் நோய்த் தொற்று இன்றி சுகாதாரமாக இருக்கும் வகையில் குப்பைகளை துடைப்பான் கொண்டு அகற்றி, கொசு மருந்து தெளிப்பு பணியையும் தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, கரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தும் நோக்கில், பொது மக்களுக்கான விழிப்புணா்வுப் பேரணியையும் அவா் தொடக்கி வைத்தாா். குப்பைகளைச் சேகரிக்கும் போது, தரம் பிரித்து மக்கும், மக்கா குப்பைகளாக வாங்கி திடக்கழிவு மேலாண்மை உரங்களைத் தயாா் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதைத் தொடா்ந்து, கேந்திர விகாா் குடியிருப்புப் பகுதி, பருத்திப்பட்டு நகா்ப்புற ஆதரவற்றோா் தங்கும் விடுதி ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாமில் தடுப்பூசி அளிக்கும் பணியையும் நேரில் ஆய்வு செய்தாா்.

ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், ஆணையா் நாராயணன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பிரபாகரன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ஜாபா் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT