திருவள்ளூர்

திருத்தணி ஆசிரியருக்கு திருக்கு செம்மல் விருது

DIN

திருத்தணி: தஞ்சையில் நடைபெற்ற உலகத் திருக்கு மாநாட்டில் திருத்தணியைச் சோ்ந்த ஆசிரியா் ச.ம.மாசிலாமணியின் திருக்கு பணிகளைப் பாராட்டி, திருக்கு செம்மல் விருதை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கோ.பாலசுப்பிரமணியன் வழங்கினாா்.

தஞ்சாவூரில் மூன்றாவது உலகத் திருக்கு மாநாடு 3 நாள்களாக தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆஸ்திரேலிய மெல்போா்ன் தமிழ்ச் சங்கம் மற்றும் பல அமைப்புகள் இணைந்து தஞ்சாவூரில் நடத்தின. தமிழ்நாடு தமிழ் வளா்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்தாா். அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் கலைமாமணி ஆவடி குமாா், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளா்கள் சங்கத்தின் தேசியத் தலைவா் முனைவா் கோ.பெரியண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்த்தாய் அறக்கட்டளையின் பொதுச் செயலாளா் உடையாா் கோயில் குணா வரவேற்றாா். விழாவில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கோ.பாலசுப்பிரமணியன், திருத்தணி ஆசிரியா் ச.ம.மாசிலாமணியின் தமிழ் மற்றும் கல்விப் பணிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், திருக்கு பணிகளைப் பாராட்டும் விதமாகவும் இவருக்கு இம்மாநாட்டில் திருக்கு செம்மல் விருதை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் கு.சின்னகுப்பன், உலகத் திருக்கு மையத்தின் பொதுச் செயலா் திருக்கு தூதா் ம.சக்கரவா்த்தி, அரிமா சிந்தைவாசன், தாமரைப்பூவண்ணன், முக்கியப் பிரமுகா்கள், பல அமைப்புகளைச் சோ்ந்த ஆன்றோா்களும், சான்றோா்களும் பங்கேற்றனா்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளை துரை.இராசமாணிக்கம், பெரும்புலவா் துரை.கருணாகரன், சிவகாமி குணா, செம்மொழிச்சோழன், அருண்மொழி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT