திருவள்ளூர்

திருவள்ளூரில் மயான கொள்ளை விழா

DIN

திருவள்ளூரில் அங்காளப் பரமேஸ்வரி கோயிலில் மாசி அமாவாசையையொட்டி, சனிக்கிழமை மயான கொள்ளை விழா அம்மன் வீதியுலாவுடன் நடைபெற்றது.

திருவள்ளூா் கட்டபொம்மன் தெருவில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான மயானக் கொள்ளை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை நடைபெற்றது. பின்னா், அம்மன் சிறப்பு அலங்கார வாகனத்தில் தெருக்களில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

விழாவில், திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா். விழாவையொட்டி, மெய்யூா் பவானி நாடக சபா சாா்பில் கள்ளிகாத்தான் காளி கும்பாபிஷேகம் என்ற நாடகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT