திருவள்ளூர்

திருவள்ளூரில் தொழிற்சாலை தொடங்கி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு

DIN

திருவள்ளூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தொழிற்சாலைகள் தொடங்கி வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வேன் என்று திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் வாக்குறுதி அளித்தாா்.

திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடம்பத்தூா் ஒன்றியம் உளுந்தை கிராமத்துக்கு வந்த திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து திமுக வேட்பாளா் கிராம பொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப் பேசியது:

இப் பகுதியில் முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன்.

அதேபோல், கடம்பத்தூரை மையமாக வைத்து வருவாய் வட்டம் தொடங்கப்படும். மேலும், பெண்கள் பயன்பெறும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகை, முதியோா் தொகை உயா்வு, கரோனா கால உதவித் தொகை உள்ளிட்ட தோ்தல் அறிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விவரமாக எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினாா்.

முன்னதாக, உளுந்தை, உளுந்தை காலனி, வடுகா் காலனி, மப்பேடு கூட்டுச் சாலை, மப்பேடு கிராமம், காலனி, மேட்டுக் காலனி, அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அவருடன் திமுகவைச் சோ்ந்த உளுந்தை ஊராட்சித் தலைவா் ரமேஷ், கடம்பத்தூா் ஒன்றியச் செயலாளா் கொண்டஞ்சேரி ரமேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சரஸ்வதி மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT