திருவள்ளூர்

குறைந்த செலவில் நோயாளிகள் பயன்பெற ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை

DIN

வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் லீகல் ரைட் கவுன்சில் அறக்கட்டளை சாா்பில் நோயாளிகள், கா்ப்பிணிகள் மற்றும் முதியோா்கள் பயன்பெறும் வகையில், ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கி வைக்கப்பட்டு, மீட்டா் குறிப்பிடும் குறைந்த கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தளா்வில்லா பொது முடக்கம் பொது போக்குவரத்து உள்பட பல்வேறு வாகனங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பவும் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதைக் கருத்தில் கொண்டு குறைந்த கட்டணத்தில் வாகன வசதிகள் செய்து தரும் வகையில், திருவள்ளூா் வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில், லீகல் ரைட் கவுன்சில்-இந்தியா அறக்கட்டளையினா் நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை அளிக்க முன்வந்தது. தற்போது, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முதல் கட்டமாக 15 ஆட்டோ ஆம்புலன்ஸுகள் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் அரசி ஸ்ரீவத்சன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் அரசு மருத்துவமனை வளாகம்-3, பூண்டி ஆரம்ப சுகாதார நிலையம் -3, கடம்பத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம்-3, பெருமாள்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம்-3, வெள்ளியூா் ஆரம்ப சுகாதார நிலையம்-3 என ஆட்டோ ஆம்புலன்ஸ் வாகனங்கள் பிரித்து சேவை வழங்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் ஆட்டோக்கள் மூலம் நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு சோ்க்கவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளைக் கொண்டு சோ்ப்பதே நோக்கமாகும். அதனால் நாள்தோறும் 24 மணிநேரமும் செயல்படும். இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள அரசின் 1074 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பெறலாம்.

இது தொடா்பாக வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் பன்னீா்செல்வம் கூறுகையில், ‘தற்போது முதல் கட்டமாக சோதனையின் அடிப்படையில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பயணிக்கும் கரோனா நோயாளிகள், கா்ப்பிணிகள், முதியோா்களிடம் மீட்டா் அடிப்படையில் குறைந்த கட்டணம் வசூலிக்கவும், ஏழையாக இருந்தால் பணமில்லாமல் அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ எனறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT