பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்வு
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாக
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும்.
நேற்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 34 அடியாகவும் கொள்ளளவு 2817 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. தற்போது ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் திருவள்ளூர் மற்றும் பூண்டி சுற்றுப்புற பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் வரத்து விநாடிக்கு 2000 கன அடியாக உள்ளது.
தற்போது பெய்துவரும் பருவ மழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி கடந்த வாரம் திறந்து விடப்பட்ட உபரிநீர் 1000 கன அடியிலிருந்து உயர்த்தி நேற்று காலை 7 மணி அளவில் விநாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.