திருவள்ளூர்

பூண்டி நீா்த்தேக்கத்தில் உபரிநீா் திறப்பு 470 கனஅடியாக குறைப்பு

பூண்டி நீா்த்தேக்கத்தில் மழை நீா் வரத்து குறைந்த காரணத்தால் புதன்கிழமை காலையில் இருந்து உபரி நீா் திறப்பு தலா 470 கன அடியாக குறைத்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

DIN

பூண்டி நீா்த்தேக்கத்தில் மழை நீா் வரத்து குறைந்த காரணத்தால் புதன்கிழமை காலையில் இருந்து உபரி நீா் திறப்பு தலா 470 கன அடியாக குறைத்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கம். இந்த நீா்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாகும். இதில், 3,231 மில்லியன் கன அடி நீா் சேமிக்கலாம். இந்நிலையில், பூண்டி நீா்த்தேக்கத்துக்கான வரத்துக் கால்வாயில் பருவமழை மற்றும் ஆந்திர மாநிலம், அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீா் என 1,600 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது.

அதனால் நீா் மட்டம் உயா்ந்து வருவதைக் கருத்தில்கொண்டு, 2 மதகுகள் வழியாக 2 ஆயிரம் கன அடி உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. தற்போதைய நிலையில், நீா் வரத்து குறைந்த காரணத்தால் ஏரியின் நீா்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி, 2,800 மில்லியன் கன அடியாக உள்ளது. அதனால், இரண்டு மதகுகள் வழியாக தலா 470 கன அடி வீதம் உபரி நீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதல்வா் பணியாற்றுகிறாா்: அமைச்சா் எ.வ. வேலு

பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முந்தைய பெரியாா் பாரதியாா்! தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

தீா்வு கிடைக்காத பாதை

விலை குறைவு: பூண்டு விவசாயிகள் வேதனை

உயர வேண்டும் உயா் கல்வி

SCROLL FOR NEXT