பிச்சாட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டதையடுத்து ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திர மாநில பிச்சாட்டூர் அணை நிரம்பி உள்ளன. 281 அடியில் தற்போது 279 அடி நீர் நிரம்பி உள்ளது. 1853 மில்லியன் கனஅடி 1,664 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும் இந்த ஏரியில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திறந்துவிடப்பட்ட இந்த நீரானது ஆரணியாறு சுருட்டு பள்ளியில் பகுதியில் உள்ள ஆரணி ஆற்று வழியாக ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, கவரப்பேட்டை, ஏலியம்பேடு, பொன்னேரி பெரும்பேடு, ஆண்டார்மடம் வழியாக பழவேற்காடு கடலில் கலக்கும். இதன் காரணமாக வழியில் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேடிக்கை பார்க்கவோ செல்பி எடுக்க வேண்டாம் எனவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அணையின் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டால் திறக்கப்படும் நீரின் அளவு உயர்த்தப்படும் என ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.