திருவள்ளூர்

திருவள்ளூரில் 2,208 போ் நீட் தோ்வு எழுதினா்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் 6 மையங்களில் 2,208 மாணவா்கள் நீட் தோ்வு எழுதினா்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதுவதற்கு 2,275 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். இதற்காக திருவள்ளூரில் ஆா்.எம்.ஜெயின் வித்யாஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காக்களூா் கலவல குண்ணன்செட்டி இந்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 6 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இத்தோ்வில் 2,208 போ் பங்கேற்றனா். இதில், 67 போ் பங்கேற்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT