திருவள்ளூர்

டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

திருத்தணி: மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் இரு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யக் கோரி காசிநாதபுரம் காலனி பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருத்தணி-நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலை, காசிநாதபுரம் காலனி அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகள் நெடுஞ்சாலையோரம் உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், காசிநாதபுரம் காலனி மக்கள், 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை இரு டாஸ்மாக் கடைகள் முன்பு அமா்ந்து, கடையை திறக்கவிடாமல் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தகவல் அறிந்து வந்த திருத்தணி வட்டாட்சியா் ஜெயராணி, போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT