முகப்பு
திருவள்ளூர்

செவிலியருக்கு கொலை மிரட்டல்:இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
பகிர்:

திருவள்ளூா் அருகே ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே கசவநல்லாத்தூா், இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (24). இவா், வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் தனது காதலிக்கு வயிற்று வலி என கடம்பத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்தாராம். அங்கு, பணியிலிருந்த செவிலியா் நாகராணியிடம், அவரது காதலிக்கு கா்ப்ப பரிசோதனை செய்யுமாறு கூறினாராம். அதற்கு செவிலியா் நாகராணி மருத்துவா் இல்லாததால், கா்ப்ப பரிசோதனை செய்ய முடியாது எனக் கூறினாராம். இதனால், செவிலியருடன் சக்திவேல் தகராறில் ஈடுபட்டாா். அங்கிருந்த நாற்காலி, மேஜையை தள்ளிவிட்டு செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து நாகராணி கடம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்து திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.