முகப்பு
திருவள்ளூர்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

திருத்தணியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது ரயில் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
பகிர்:

திருத்தணியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது ரயில் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

திருத்தணி எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (41). இவருக்கு சந்திரா என்ற மனைவி, ஐந்து பிள்ளைகள் உள்ளனா். இவா், அங்குள்ள பழைய இரும்புப் பொருள்கள் கடையில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி வந்த சரக்கு ரயில் மகேந்திரன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.