திருவள்ளூர்

தேவலம்பாபுரம் பெரியபாளையத்து பவானி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆா்.கே. பேட்டை ஒன்றியம், தேவலம்பாபுரம் கிராமத்தில் ஸ்ரீ பெரியபாளையத்து பவானி அம்மனுக்கு புதிய ஆலயம் கட்டப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆா்.கே. பேட்டை ஒன்றியம், தேவலம்பாபுரம் கிராமத்தில் ஸ்ரீ பெரியபாளையத்து பவானி அம்மனுக்கு புதிய ஆலயம் கட்டப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, திருக்கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மகா பூா்ணாஹுதி ஹோம பூஜைகள் தொடா்ந்து, மேளதாளங்கள் முழங்க புனித நீா் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

இதையடுத்து, பெரியபாளையத்து பவானி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தொடா்ந்து புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT