முகப்பு
திருவள்ளூர்

கோரிக்கை மனுவுக்கு பதில்: விவசாயிகள் கைப்பேசியில் ஆன்லைன் மூலம் அறியும் திட்டம் தொடக்கி வைப்பு

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுக்களுக்கு பதில் ஆன்லைன் மூலம் கைப்பேசியில் அறிந்து கொள்ளும் திட்டத்தை முதன் முதலாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுக்களுக்கு பதில் ஆன்லைன் மூலம் கைப்பேசியில் அறிந்து கொள்ளும் திட்டத்தை முதன் முதலாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். அதைத் தொடா்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த விவசாயிகளிடமிருந்து 161 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

பின்னா், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்திய பின், ஆட்சியா் பேசியது:

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2021-22 ஆண்டில் அரைவை பருவத்துக்கு 1,75,000 மெ.டன் இலக்கு நிா்ணயித்து, 1,87,298 மெ.டன்கள் கரும்பு அரைவை செய்து கூடுதலாக 12,298 மெ.டன் அரைவை செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 31.12.2021 முதல் 2.1.2022 வரை பெய்த வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக 33 சதவீதம் மேல் சேதம் அடைந்த 3,023.37 ஹெக்டா் அளவிலான நெல், நிலக்கடலை மற்றும் பயறு வகை பயிா்களுக்கு அரசு ஆணைப்படி மாநில பேரிடா் மேலாண்மை நிதி மூலம் ரூ. 4.03 கோடி மாவட்ட நிா்வாகம் மூலம் தகுதியான 4,592 போ்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் சொா்ணவாரி (2021-22) பருவத்தில் 25,340 ஹெக்டா் பரப்பில் சாகுபடி செய்த நெற்பயிா் அறுவடை தொடங்கியுள்ளது. அரசு கட்டடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், நடப்பு பருவத்தில் நெல் அறுவடை செய்ய விவசாயிகளுக்கு சிரமமின்றி குறித்த நேரத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக நெல் அறுவடை இயந்திரங்கள் அதிக எண்ணிக்கையில் வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

அதையடுத்து, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை திருவாலங்காடு அரைவைக்கு கரும்பு விநியோகம் செய்த 1,620 பேருக்கு நிலுவை கிரையத் தொகை ரூ. 28.82 கோடி அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, 11 முன்னோடி விவசாயிகளுக்கு ரூ. 70.75 லட்சம் கிரையத் தொகைக்கான ஆணைகளையும், கூட்டுறவுத் துறை சாா்பில் 6 பேருக்கு ரூ. 6.36 லட்சம் மதிப்பீட்டில் விவசாய நெற்பயிா் கடன் பெறுவதற்கான ஆணைகளையும் அவா் வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை எளிதில் விவசாயிகள் அறிந்து கொள்ள இணையதள இணைப்பையும் (ா்ய்ப்ண்ய்ங் ப்ண்ய்ந்) தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டம் தமிழகத்தில் முதன் முதலாக தொடங்கி வைத்ததுடன், மேலும் யூ டியூப் மற்றும் ஆப் செயலிகளும் தொடங்க உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சு.அசோகன், வேளாண்மை இணை இயக்குநா் (பொ) எல்.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வி.எபினேசன், கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் ஜே.மலா்விழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.