திருவள்ளூர்

முல்லைப் பெரியாறு அணையில் ரூல் கர்வ் நடைமுறையை அமல்படுத்த கூடாது: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதியை  நடைமுறையில்  அமல்படுத்த கூடாது. அணையில் நிர்ணயிக்கப்பட்ட 142 அடி உயர நீர்மட்டம் தேக்க வேண்டும் என்று திங்கள்கிழமை கம்பத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 136.5 அடியாக இருக்கும்போது ரூல் கர்வ் விதியை அமல்படுத்த வேண்டும் என்று கேரள அரசு கடந்தாண்டு தாக்கல் செய்த மனு காரணமாக ரூல் கர்வ் விதியை, முல்லைப் பெரியாறு அணையில் அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

தற்போது அணையில், 136 அடி நீர்மட்டம் எட்டும் நிலையில், ரூல்கர்வ் விதியை அமல்படுத்தப் போவதாக இருந்தால்,  அமல்படுத்த கூடாது என்று பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில்,142 அடி நீர் மட்டத்தை நிலை நிறுத்த வேண்டும். தமிழக அரசு ரூல் கர்வ் விதியை அமல்படுத்த கூடாது என்று முழக்கமிட்டனர். பின்னர் விவசாய சங்க நிர்வாகிகள் அன்வர் பாலசிங்கம், பொன்.காட்சிக்கண்ணன், சலேத்து, தாமஸ், தவமணி, உள்ளிட்டவர்கள் அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வினிடம் மனு கொடுத்தனர். தெற்கு காவல் நிலைய காவலர்கள் பாதுகாப்பு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT