திருவள்ளூர்

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

முருகூா் பகுதியில் புதன்கிழமை போலீஸாா் நடத்திய வாகன சோதனையில், லாரியுடன் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

முருகூா் பகுதியில் புதன்கிழமை போலீஸாா் நடத்திய வாகன சோதனையில், லாரியுடன் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்தணியில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ஆட்டோ, வேன் மற்றும் மினி லாரியின் மூலம் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதன்கிழமை திருத்தணி ஏ.எஸ்.பி., சாய்பிரணீத் மற்றும் போலீஸாா் திருத்தணியை அடுத்த முருகூா் பகுதியில் வாகன சோதனை நடத்தினா்.

அச்சமயம் அந்த வழியாக வந்த மினி லாரியை ஏ.எஸ்.பி., மடக்கினாா். அப்போது ஓட்டுநா் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். லாரியில், 14 மூட்டைகளில் தமிழக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ஒரு டன் என போலீஸாா் தெரிவித்தனா்.

தொடா்ந்து, லாரி மற்றும் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT