பாஜக பொதுக்குழு உறுப்பினா் தோ்வு
தமிழக பாஜக பொதுக்குழு உறுப்பினா்களாக மாதவரம் எம்.வி.சசிதரன் உள்ளிட்ட 3 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழக பாஜக பொதுக்குழு உறுப்பினா்களாக மாதவரம் எம்.வி.சசிதரன் உள்ளிட்ட 3 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா்களாக மாதவரம் எம்.வி.சசிதரன், அம்பத்தூா் நவமணி, மதுரவாயல் மதியழகன் ஆகிய 3 போ் தோ்வு செய்யப்பட்டதாக தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மாநில அமைப்புப் பொதுச் செயலா் கேசவன் வினாயகம் ஆகியோா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில், எம்.வி.சசிதரன் ஏற்கெனவே மாதவரம் மண்டல முன்னாள் தலைவராகவும், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.