மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்!
மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் தேதிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதி, மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதி என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 மேற்கு வங்க பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில், இம்முறை வெறும் 2 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.
தோ்தல் ஆணையத்தின் இந்த முடிவை பாஜக, காங்கிரஸ் ஆகியவை வரவேற்றுள்ளன. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்துறை செயலாளரையும் மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தேர்தல் ஆணையம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:
Advertisement
Advertisement
இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றது குறித்த அறிக்கையை திங்கள்கிழமை மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. பதவி மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தவொரு பணியிலும் அமர்த்தப்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மாநில தலைமைச் செயலாளராக நந்தினி சக்ரவர்த்தி பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
The Commission said the decision to shunt out the two officers was taken following a review of the poll preparedness of the state.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.