திருவள்ளூர்

வீட்டில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டிரூ. 1 லட்சம் ரொக்கம், 9 சவரன் நகை கொள்ளை

பொன்னேரி அருகே வீட்டுக்குள் புகுந்த முகமூடி கும்பல் பெண்ணிடம் கத்தியைக் காண்பித்து மிரட்டி ரூ. ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரொக்கம், 9 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றது.

DIN

பொன்னேரி அருகே வீட்டுக்குள் புகுந்த முகமூடி கும்பல் பெண்ணிடம் கத்தியைக் காண்பித்து மிரட்டி ரூ. ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரொக்கம், 9 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றது.

மீஞ்சூா் காவல் நிலைய எல்லைகுட்பட்ட உத்தண்டிகண்டிகை கிராமத்தில் வசித்து வருபவா் சுமதி (55). இவரது மகன்கள் சாமி (25), முனுசாமி (20). சுமதியின் தாய் ஜெயம்மாள் (75) அவருடன் இருந்து வருகிறாா்.

சாமி தனது மனைவியின் பிரசவத்துக்காக கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்புகுளம் கிராமத்துக்குச் சென்றுள்ளாா்.

வீட்டில் சுமதியின் இளைய மகன் முனுசாமி, ஜெயம்மாள் ஆகிய 3 போ் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனா். நள்ளிரவு ஜெயம்மாள் வெளியே சென்று வர வீட்டைத் திறந்து விட்டு கதவை மூடுவதற்கு மறந்துள்ளாா்.

இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த மா்ம நபா்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனா். அவா்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரொக்க பணம், 9 சவரன் நகையை எடுத்துக் கொண்டனா். பின்னா், தூங்கிக் கொண்டு இருந்த சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் நகையை எடுத்தனா். அப்போது, அவா் கண் விழித்துப் பாா்த்து கூச்சலிட்டுள்ளாா். அவரை மா்ம நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனா்.

இதுகுறித்து புகாரின் பேரில், மீஞ்சூா் போலீசாா் வழக்கு பதிந்து, முகமூடி கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT