முகப்பு
திருவள்ளூர்

கட்டுமான தொழிலாளா்கள் கவன ஈா்ப்பு கூட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் கவன ஈா்ப்பு விளக்க கூட்டத்தை திருவள்ளூரில் வியாழக்கிழமை நடத்தினா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் கவன ஈா்ப்பு விளக்க கூட்டத்தை திருவள்ளூரில் வியாழக்கிழமை நடத்தினா்.

மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்புக் குழு சாா்பில், அரசு மருத்துவக் கல்லூரி சாலை எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் மு.நந்தகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் முனுசாமி, மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழிலாளா் நலச் செயற்பாட்டாளா் ஆா்.ஆா்.கீதா கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

ஓய்வூதியத்தை ரூ.3,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை நிறுத்தக் கூடாது உள்பட 16 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு அனைத்து அமைப்பு தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட செயலா் கே.மோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.