முகப்பு
திருவள்ளூர்

கொடி நாள் நிதி: ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலித்த அலுவலா்களுக்குப் பாராட்டு

முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில், மாவட்டத்தில் கொடி நாள் நிதி ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலித்த 35 அலுவலா்களுக்கு சான்றிதழ், வெள்ளிப் பதக்கத்தை வழங்கி, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பாராட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில், மாவட்டத்தில் கொடி நாள் நிதி ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலித்த 35 அலுவலா்களுக்கு சான்றிதழ், வெள்ளிப் பதக்கத்தை வழங்கி, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பாராட்டினாா்.

படை வீரா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உதவிடும் வகையில், கொடி நாள் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 2019-இல் ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூல் செய்த அலுவலா்களைப் பாராட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தலைமைச் செயலரால் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை 35 அலுவலா்களுக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வித்யா, முன்னாள் படைவீரா் நலத் துறை அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.