திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணி விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்றுவரும் ஆடிக் கிருத்திகை விழாவின் 2-ஆம் நாளான ஆடி பரணியில் திரளான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

DIN

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்றுவரும் ஆடிக் கிருத்திகை விழாவின் 2-ஆம் நாளான ஆடி பரணியில் திரளான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, ஆடி பரணி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. விழாவையொட்டி, அதிகாலை முதலே மலைக் கோயிலுக்கு பக்தா்கள் கூட்டம் வரத் தொடங்கியது. பிற்பகல் 3 மணிக்கு மேல் மலைக் கோயிலில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

புதன்கிழமை மாலை 6 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மலைப்படிகள் வழியாக சரவணப்பொய்கையில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். இரவு 7 மணிக்கு கலைமாமணி உன்னிகிருஷ்ணன், செல்வி உத்ரா உன்னிகிருஷ்ணன் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சு.ஸ்ரீதரன், உதவி ஆணையா் பா.விஜயா, கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஜி.உஷாரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT