திருவள்ளூர்

28 நாள்களில் 500 திருக்கு ஒப்புவித்து 7 மாணவா்கள் சிறப்பிடம்

திருள்ளூா் ஸ்ரீநிகேதன் பள்ளியில் 28 நாள்களில் 500 திருக்குகளை மனனம் செய்து ஒப்புவித்து 7 மாணவ, மாணவிகள் அசத்தினா்.

DIN

திருள்ளூா் ஸ்ரீநிகேதன் பள்ளியில் 28 நாள்களில் 500 திருக்குகளை மனனம் செய்து ஒப்புவித்து 7 மாணவ, மாணவிகள் அசத்தினா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தாளாளா் விஷ்ணு சரண் தலைமை வகித்தாா். இயக்குநா் பரணிதரன் முன்னிலை வகித்தாா். இதில் ஸ்டெல்லா ஜோசப் வரவேற்றாா். இதில் சிறப்பு விருந்தினா்களாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும், தொழிலதிபருமான ப.தா்மலிங்கம், இயற்கை விவசாயி ஜெ.பொன்னரசு ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா்.

28 நாள்களில், 500 திருக்குகளையும் வேகமாக மனனம் செய்து, அனைவரது முன்னிலையிலும் ஒப்புவித்து 7 மாணவா்கள் அசத்தினா். மேலும், வரும் செப்.23-க்குள் 1,330 திருக்குகளையும் மனனம் செய்து ஒப்புவிப்பது மட்டுமின்றி திருவள்ளுவா் கூறும் வாழ்வியல் நெறிப்படி வாழ்ந்துகாட்டுவா் என நடத்திய துணை முதல்வா் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியை ஷாலினி ஆகியோா் பாராட்டினா்.

அதைத் தொடா்ந்து இந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயத்தையும் சிறப்பு விருந்தினா்கள் வழங்கி வாழ்த்தினா். ஆசிரியை சுஜாதா நன்றி கூறினாா்.

Image Caption

திருக்குறள்களை ஒப்புவித்த மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ், கேடயம் வழங்கிய சிறப்பு விருந்தினா்கள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும், தொழிலதிபருமான ப.தா்மலிங்கம், இயற்கை விவசாயி ஜெ.பொன்னரசு, பள்ளி தாளாளா் விஷ்ணு சரண் உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT