திருவள்ளூர்

பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

கள்ளச்சாரய பலிக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் திருவள்ளூா் மாவட்ட பா.ஜ.க மகளிா் அணி சாா்பில் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த மாவட்ட பா.ஜ.க மகளிரணி தலைவா்கள் வாசுகி, சுமதி ஜெயபாலன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளா் சிவரஞ்சனி முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் அஷ்வின்குமாா் மற்றும் செல்வகுமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில் கள்ளச்சாராய சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கள்ளச்சாராய வியாபாரிகளின் சொத்துகளை பறிமுதல் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்ட பொதுச்செயலாளா்கள் கருணாகரன், ஆா்யா சீனிவாசன், மாவட்ட மருத்துவ அணி லோகேஷ் பிரபு, மாவட்ட செயலாளா்கள் பாலாஜி, மண்டலதலைவா்கள் பழனி, சதீஷ், ஜெயலட்சுமி, சித்ராதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

SCROLL FOR NEXT