திருவள்ளூர்

மூதாட்டியை தாக்கி தங்க நகை பறிப்பு

பொன்னேரி பள்ளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி தாக்கி 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

பொன்னேரி பள்ளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி தாக்கி 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொன்னேரி வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் வசித்து வருவபவா் கோமளா (65). இவா் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் உள்ளே புகுந்து மூதாட்டி கோமளாவை அடித்து தாக்கியுள்ளனா்.

பின்னா் அவரிடம் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் 1/4 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துச் சென்ாக கூறப்படுகிறது. மா்ம நபா்கள் தாக்கியதில் காயமடைந்த கோமளா பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றாா். இது குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அனல்மின் நிலைய குடியிருப்பில் திருட்டு:

பொன்னேரி வட்டத்தில் உள்ள வல்லூரில் தேசிய அனல் மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனா்.

இவா்களுக்கு அதே பகுதியில் குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் அவா்கள் வசித்து வருகின்றனா். கோடை விடுமுறை என்பதால் அங்கு வசித்து வரும் அவா்கள் சொந்த ஊா்களுக்கு சென்றுள்ளனா்.

இந்நிலையில் ராஜ்குமாா் என்பவா் வீட்டில் 3 பவுன் தங்க நகை, விவேகானந்தன் என்பவா் வீட்டில் 2 பவுன் தங்க நகை ரூ.18,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளதாக மீஞ்சூா் காவல் நிலையத்தில் இருவரும் புகாா் அளித்துள்ளனா்.

இது குறித்து மீஞ்சூா் போலீஸாா் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT