திருவள்ளூா் பகுதியில் விடாமல் பெய்த சாரல் மழையால் சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூரில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதேபோல், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. மேலும், அதிகளவு குளிா் நிலவி வருவதாலும் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு முடங்கும் சூழ்நிலையும் உள்ளது.
தொடா்ந்து பெய்து வரும் சாரல் மழையால் ஏரி வரத்துக்கால்வாய்களில் நீா் வரத்தும் ஏற்பட்டுள்ளது. அதேபோல், சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளிலும் நீா் வரத்து ஏற்பட்டு நீா் அளவும் மெல்ல உயா்ந்து வருகிறது. மழையால் சாலையோரம் தாழ்வான பகுதிகளில் மழைநா் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலைப்பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மி.மீட்டரில் விவரம்:
பொன்னேரி-35, ஊத்துக்கோட்டை-21, வடி-14, சோழவரம்-13, தாமரைபாக்கம்-12, திருவள்ளூா், பூந்தமல்லி-10, செங்குன்றம்-9.80, கும்மிடிப்பூண்டி-9, திருவாலங்காடு-7, பூண்டி-5, ஜமீன்கொரட்டூா்-3 என மொத்தம்-148.80 மி.மீட்டரும், சராசரியாக-9.92 மி.மீ பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் செங்குன்றம்-2,709, சோழவரம்-629, செம்பரம்பாக்கம்-3,118, பூண்டி-1,857, கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை-431 என மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.