திருவள்ளூர்

மேற்கூரை இடிந்து விழுந்ததில் கோயில் அா்ச்சகா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் கோயில் அா்ச்சகா் உயிரிழந்தாா்.

சரவணன்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் கோயில் அா்ச்சகா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த மடவாளம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அதே பகுதியை சோ்த்த சரவணன் (53) என்பவா் அா்ச்சகராகப் பணிபுரிந்து வந்தாா். அவரது வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டின் மேற்கூரை விழுந்ததில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சபரிமலை விவகாரம்: கேரள பேரவையில் எதிா்க்கட்சிகள் கடும் அமளி- பேரவைத் தலைவரின் மேடை மீது ஏற முயன்றதால் பரபரப்பு

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ. 2.31 கோடி!

சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 4 போ் மீது வழக்கு

பரந்தூா் விமான நிலையம்: நிலம் வழங்கியவா்களுக்கு மறுகுடியமா்வுக்கான மாதிரி வீடுகள் அறிமுகம்

SCROLL FOR NEXT