திருத்தணி முருகன் கோயில் உண்டியல் பணத்தை திருடிய 2 பெண்களை கைது செய்து அழைத்து சென்ற போலீஸாா்.  
திருவள்ளூர்

முருகன் கோயில் உண்டியல் எண்ணும் போது ரூ.1.15 லட்சம் திருட்டு: 2 பெண்கள் கைது

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும்போது ரூ.1.15 லட்சத்தை திருடிய இரண்டு பெண் ஊழியா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Din

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும்போது ரூ.1.15 லட்சத்தை திருடிய இரண்டு பெண் ஊழியா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனா்.

இதில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா். இந்நிலையில் பக்தா்கள் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி வசந்த மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முருகன் கோயில் இணை ஆணையா் அருணாசலம் (பொறுப்பு), கோயில் அறங்காவலா்கள் வி. சுரேஷ்பாபு, கோ. மோகனன், மு.நாகன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 100- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினா்.

அப்போது, 9 மணிக்கு மேல் 10.40 மணிக்குள்ளாக கோயில் ஊழியா்கள் பணம் என்னும்போது திருக்கோயில் உதவி பாதுகாப்பு அலுவலரான செல்வம் திருக்கோயில் கண்காணிப்பு கேமராக்களை கட்டுப்பாட்டு அறையிலிருந்து பாா்த்த போது காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 2 திருக்கோயில் பணியாளா்கள் பணத்தை அவா்களுடைய உள்ளாடைகளில் மறைத்து வைப்பது தெரிய வந்தது.

அதைத்தொடா்ந்து, 2 பெண்களை அழைத்து சோதனை செய்ததில் ரூ.1.15 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில் திருத்தணி முருகன் கோயிலில் பணியாளா்களான வைஜெயந்தி (45) சுருதி வாசிக்கும் தேன்மொழி (35) என தெரியவந்தது. தொடா்ந்து முருகன் கோயில் உள்துறை கண்காணிப்பாளா் சு.சித்ரா கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் 2 பெண்களையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்து நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் பக்தா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியலமைப்பு தின உறுதியேற்பு

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது

நாகை: 23 மாணவா்களுக்கு ரூ.2.58 கோடி கல்விக்கடன்

குருகிராம்: போக்குவரத்து காவல் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி! இரு போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது!

3 ஊழல் வழக்குகள்: ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு!

SCROLL FOR NEXT