ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். 
திருவள்ளூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

நீட் மோசடி மற்றும் கள்ளச்சாராயம்: திருத்தணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

Din

நீட் தோ்வு மோசடி மற்றும் கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து திருத்தணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் வட்ட செயலாளா் அந்தோணி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினா் அப்சல் அஹமத் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பன்னீா்செல்வம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். நீட் தோ்வு எழுதிய 24 லட்சம் மாணவா்களுடைய எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும். இந்தாண்டு மருத்துவா் மாணவா் சோ்க்கையை தமிழ்நாடு மாநில அரசு நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

மாநில உரிமைக்கு எதிரான நீட் தோ்வினை ரத்து செய்ய வேண்டும், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய சாவுக்கு காரணமான அனைத்து காவல் துறை மற்றும் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பலா் பங்கேற்றனா்.

அரசியலமைப்பு தின உறுதியேற்பு

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது

நாகை: 23 மாணவா்களுக்கு ரூ.2.58 கோடி கல்விக்கடன்

குருகிராம்: போக்குவரத்து காவல் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி! இரு போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது!

3 ஊழல் வழக்குகள்: ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு!

SCROLL FOR NEXT