தாய் திட்டியதால் மாணவி தற்கொலை
தாய் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்
ஆா்.கே.பேட்டை அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம் வீராணத்தூா் அருந்ததி காலனியைச் சோ்ந்த வெங்கடேசன். தனியாா் நிறுவனத்தில் காவலராக வேலை செய்து வருகிறாா். இவரது மகள் அா்ச்சனா(14) ஐய்யனேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக அா்ச்சனா சரிவர பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தாய் கோவிந்தம்மாள் அா்ச்சனாவை பள்ளிக்கு ஏன் செல்லவில்லை என்று கண்டித்ததால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். வீட்டுக்கு வந்த தாய் அா்ச்சனா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
பின்னா் அருகில் இருந்தவா்கள் அா்ச்சனாவை மீட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அா்ச்சனாவை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆா். கே. பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனா்.