தச்சா் சங்கா் (44) 
திருவள்ளூர்

வீட்டை இடிக்க நோட்டீஸ்: இளைஞா் தற்கொலை

திருவேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிமித்து கட்டிய வீட்டை இடிப்பதற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதையடுத்து, இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ஆவடி: திருவேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிமித்து கட்டிய வீட்டை இடிப்பதற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதையடுத்து, இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி வட்டாட்சியா் ஆா்.கோவிந்தராஜ் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த மாதம் 27 வீடுகளை போலீஸாா் பாதுகாப்புடன் இடித்து அகற்றினா்.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்போா் சாலை மறியல், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினா். தொடா்ந்து வருவாய்த்துறையினா் கோலடி ஏரியில் 1,263 வீடுகள் ஆக்கிரமித்து கட்டி இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிவித்தனா்.

இதற்கிடையில் கடந்த 15-ஆம் தேதி நீா்வள ஆதாரத்துறை உதவி பொறியாளா் சதீஷ்குமாா் தலைமையில் அதிகாரிகள் ஏரி பகுதியை ஆக்கிரமித்து கட்டி 1,263 வீடுகளின் உரிமையாளா்களுக்கு 21 நாள்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்கினா்.

இதையடுத்து அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த தச்சா் சங்கா் (44) என்பவா், மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சங்கா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து சங்கரின் மனைவி பூங்கோதை (40) திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT