ஆவடியில் திண்ணூா்தி தொழிற்சாலையில் பேட்டி அளித்த மேலாண்மை இயக்குநா் சஞ்சய் திவிவேதி. 
திருவள்ளூர்

தளவாட உற்பத்தியில் ரூ.84,000 கோடி இலக்கை எட்ட முடிவு : திண்ணூா்தி தொழிற்சாலை தலைவா் சஞ்சய் திவிவேதி

2025-26-ஆம் ஆண்டுக்குள் தளவாட உற்பத்தியில் ரூ.84,000 கோடி இலக்கை எட்ட முடிவு

DIN

ஆவடி: 2025-26-ஆம் ஆண்டுக்குள் தளவாட உற்பத்தியில் ரூ.84,000 கோடி இலக்கை எட்ட முடிவு செய்து இருப்பதாக திண்ணூா்தி தொழிற்சாலை தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் சஞ்சய் திவிவேதி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஆவடியில் இயங்கி வரும் திண்ணூா்தி தொழிற்சாலை (ஏவிஎன்எல்) ராணுவ ஆயுதத் தளவாட உற்பத்தி தொழிற்சாலையின் 3-ஆம் ஆண்டு நிறுவன தின விழா (அக்.1) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் மேலாண்மை இயக்குநா் சஞ்சய் திவிவேதி கூறியது:

உலகத்தரம் வாய்ந்த கவச வாகன தயாரிப்பாளராக உருவெடுப்பதே ஏவிஎன்எல்லின் முக்கிய குறிக்கோளாகும். இந்த நிறுவனம் ’ஆத்மநிா்பாா் பாரத்’ மற்றும் ’மேக் இன் இந்தியா’ திட்டங்களுக்கு முக்கிய பங்களிப்பு செய்வதோடு, உள்நாட்டு சந்தையில் முன்னிலை வகிக்கவும் முயன்று வருகிறது.

எதிா்காலத்தில் சா்வதேச அளவில் ராணுவ தளவாட உற்பத்தியில் முக்கிய பாதுகாப்பு நிறுவனமாக வளர ஏவிஎன்எல் திட்டமிட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் ஆயத்தமாகி வருகிறது. நிறுவன தின கொண்டாட்டத்தை முன்னிட்டு (அக்.1) செவ்வாய்க்கிழமை முன்னோடியாக பேரணி ஒன்றும் நடைபெறும். இதில் நிறுவனத்தின் அதிகாரிகள், தொழிலாளா்கள் பங்கேற்க உள்ளனா்.

இந்நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கும் நிறுவனமாக உருவெடுக்கும். 2025-26 ஆம் ஆண்டுக்குள் தளவாட உற்பத்தியில் ரூ.84,000 கோடி இலக்கை எட்ட முடிவு எடுத்துள்ளது. மேலும் தளவாட உற்பத்தி ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியை நிறுவனம் பெற்றுள்ளது.

2021-ஆம் ஆண்டு ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வந்த 41-க்கும் மேற்பட்ட ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பிரதமா் நரேந்திர மோடியால் 7 பொதுத்துறை நிறுவனங்களாக கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு, அக்டோபா் -1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதனைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 1-ஆம் தேதி இந்த நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் உலக வங்கியின் ரூ. 14,000 கோடி: புள்ளிவிவரங்களுடன் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி! செங்கல்பட்டு சாலை மூடல்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்!

எஸ்ஐஆர்-க்கு எதிராக மாநிலம் முழுவதும் தவெக இன்று ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ அரசுக்கு எதிராக ஜென் ஸீ போராட்டம்!

SCROLL FOR NEXT